பிரான்சில் வீட்டை தாக்கிய மின்னல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
பிரான்சில் வீடு ஒன்றை மின்னல் தாக்கிய நிலையில், அந்த வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் புகைபோக்கியும் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
திங்கட்கிழமையன்று, தென்மேற்கு பிரான்சிலுள்ள Plaisance என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றை மின்னல் தாக்கியது.

அப்பகுதிக்கு ஏற்கனவே மஞ்சள் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்னல் தாக்கியதில் அந்த வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் புகைபோக்கியும் சேதமடைந்தன.
மின்னல் தாக்கிய நேரத்தில், அந்த வீட்டில் ஐந்து பேர் இருந்துள்ளார்கள். என்றாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்து 13 தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அந்த வீட்டிலிருந்தவர்களை அவர்கள் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |