விமான நிலையத்தில் தாக்கிய மின்னல்: ஓடுபாதை மூடல்..பயணிகளுக்கு எச்சரிக்கை
Lightning storm at brisbane airport: அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தில் மின்னல் தாக்கியதால் ஓடுபாதை மூடப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் மின்னல் தாக்கியதால் ஓடுபாதை மூடப்பட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இடியுடன் கூடிய மழை
செவ்வாய்க்கிழமை இரவு, அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு குயின்ஸ்லாந்திற்கு கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை நடைமுறையில் இருந்தது.
சேதத்தை ஏற்படுத்தும் பலத்த காற்று, பெரிய ஆலங்கற்கள் மற்றும் கனமழை ஆகியவை முன்னறிவிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இந்த நிலையில், பிரிஸ்பேன் விமான நிலையத்தில் மின்னல் தாக்கியது. இதனால் ஓடுபாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது.
விமானங்கள் தாமதம்
இதன் காரணமாக ஓடுபாதை மூடப்பட்டதால், பிரிஸ்பேன் விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் மேற்கு ஓடுபாதை பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டதாகவும், இரவு முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் விமான நிலையம் அறிவித்தது.
