ஒரே நாளில் 12,000.. கனடாவை நிலைகுலையச் செய்த மின்னல் தாக்குதல்கள்! ஒரு மாகாணமே தீப்பற்றி எரியும் கோரம்!
கனடாவில் மின்னல் தாக்குதல்களால் 130-க்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு கனடா முழுவதும் அதிகபடியான வெப்ப அலைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மின்னல்களால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 136 இடங்கில் காட்டுத் தீ தீவிரமாக இருப்பதாக அம்மாகாண கட்டுத் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியா அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை சுமார் 12,000 மின்னல் தாக்குதல் பதிவானதாகவும், அதில் பல மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகே தாக்கியதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.