சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கியவர்களை மீட்கச் சென்ற மீட்புக் குழுவினர் சந்தித்த அதிர்ச்சி
மேலை நாடுகளில், மின்னல் இருமுறை தாக்குவதில்லை என்னும் ஒரு சொல் வழக்கு உள்ளது. அதன் உண்மையான பொருள் வேறு என்றாலும், உண்மையாகவே மின்னல் இருமுறை தாக்கிய ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.
மின்னல் தாக்கிய இருவர்
Fribourg மாகாணத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் மின்னலால் தாக்கப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை, 8.30 மணியளவில், 51 வயது நபர் ஒருவரும், 16 வயது சிறுவன் ஒருவனும் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில், அந்த 51 வயது நபர் படுகாயமடைந்துள்ளார்.
Nicolas Tucat/AFP/Getty Images
தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர்
தகவலறிந்து ஹெலிகொப்டர் ஒன்றில் மீட்புக் குழுவினர் புறப்பட்ட நிலையில், காயம்பட்டவர்களை மீட்கச் சென்ற ஹெலிகொப்டரை மின்னல் தாக்கியுள்ளது.
அந்த தாக்குதலில் ஹெலிகொப்டரின் பைலட்டும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் சிக்கியுள்ளனர். நல்ல வேளையாக அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஏற்கனவே மின்னல் தாக்குதலுக்காளானவர்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவிக்குழுவினர், இந்த பைலட் மற்றும் பொலிஸ் அதிகாரிக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |