கனடாவில் ஆயிரக்கணக்கான மின்னல் தாக்கியதால் பற்றியெரியும் புதிய காட்டுத்தீ
மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதேவேளையில் ஒன்ராறியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
கடும் வெப்பம், மின்னல்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 34,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியான காட்டுத்தீ சம்பவங்களுக்கும் வெளியேற்ற உத்தரவுகளுக்கும் வழிவகுத்தன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அந்த மாகாணத்தில் 25 வெளியேற்ற உத்தரவுகளும் 90 தீவிர காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன; வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவுவதால் இவை மேலும் பரவக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த வெப்பநிலையால் தூண்டப்பட்ட கடும் வெப்பம் மற்றும் மின்னலுடன் கூடிய புயல்களால் ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த கோடையில் கனடா முழுவதும் உள்ள தொலைதூரக் காடுகளை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.
கடந்த வாரம், அவற்றிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மத்திய-மேற்குப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களின் மீது பரவியது. வடமேற்கு ஒன்ராறியோவில் 139 காட்டுத்தீ சம்பவங்கள் தீவிரமாக எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலைமை மேம்படும்
அவற்றில் 32 எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து வருவதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடாவின் சுற்றுச்சூழல் துறை, ஆல்பர்ட்டாவின் பேன்ஃப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமான காற்றின் தரம் குறித்து வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது; இருப்பினும், வார இறுதியில் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது.

இதனிடையே, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட 5,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களையும், சுமார் 300 நீர் வீசும் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் மக்களை வெளியேற்றும் விமானங்களையும் ஃபெடரல் அரசாங்கம் திரட்டும் என்று பிரதமர் கார்னி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் சுமார் 2.95 மில்லியன் ஹெக்டேர் (7.29 மில்லியன் ஏக்கர்) நிலம் எரிந்துள்ளது; இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி அளவான சுமார் 2.55 மில்லியன் ஹெக்டேரை விட அதிகமாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளின் இதே காலகட்டத்தை விட, கனடாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதாகவே தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |