வில்லியம் ஹரியின் பிள்ளைகளைப்போல அதிகம் கவனிக்கப்படாத ராணி கமீலாவின் ஐந்து பேரப்பிள்ளைகள்...
பிரித்தானிய மன்னர் சார்லசின் மனைவியாகிய ராணி கமீலாவுக்கு மொத்தம் 10 பேரப்பிள்ளைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இளவரசர்கள் வில்லியம் ஹரியின் பிள்ளைகளைப்போல அவர்கள் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு டயானா மூலம் பிறந்த பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியமும் ஹரியும்...
இளவரசர் வில்லியமுக்கு மூன்று பிள்ளைகள், ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ். இளவரசர் ஹரிக்கு இரண்டு பிள்ளைகள், ஆர்ச்சி மற்றும் லிலிபெட்.
ஆனால், ராணி கமீலாவுக்கு இவர்கள் மட்டும் பேரப்பிள்ளைகள் கிடையாது. அவருக்கு மேலும் ஐந்து பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், கமீலாவுக்கு தனது முதல்திருமணத்தின் மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மகன் டாம் பார்க்கர், மகள் லாரா.
கமீலாவின் மகன் டாமுக்கு இரண்டு பிள்ளைகள், லோலா (15), ஃப்ரெடி (12).
கமீலாவின் மகள் லாராவுக்கு மூன்று பிள்ளைகள், எலிசா (14), இரட்டையர்களான லூயிஸ் மற்றும் கஸ் (Louis and Gus, 13).
Image: Getty Images
ஆக மொத்தம், கமீலாவுக்கு 10 பேரப்பிள்ளைகள். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு பிறந்ததால் ஜார்ஜ், சார்லட், லூயிஸ், ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோர் ஊடகங்களின் பார்வையிலேயே இருக்கிறார்கள்.
ராஜ குடும்பத்தில் பிறக்காததால், ராணியின் பேரப்பிள்ளைகளாகவே இருந்தாலும், அவரது பிள்ளைகளோ அல்லது மற்ற ஐந்து பேரப்பிள்ளைகளோ அதிகம் கவனிக்கப்படுவதில்லை எனலாம்.
Image: Getty Images