பிரித்தானியாவில் மாணவர்களுக்கு இடையே வெடித்த மோதல்: 21 வயது இளைஞருக்கு நடந்த பரிதாபம்!
பிரித்தானியாவில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லிங்கன் பல்கலைக்கழகத்தின் துர்குட் மார்ஷல் மாணவர் விடுதியில் புதன் கிழமை இரவு மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் 21 வயதான இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது அடையாளங்கள் மற்றும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த இருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்கள் சண்டையால் இறந்துள்ள மாணவரின் சகவகுப்பு தோழர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லுரி வளாகத்திற்குள் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இறந்த மாணவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எங்கள் அஞ்சலியை தெரிவித்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
செஸ்டர் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் டெப் ரியான் இது குறித்து தெரிவிக்கையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவருடைய அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கத்திக்குத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் செஸ்டர் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளது.