கனடா விமான விபத்துக்கும் இந்தியர் ஒருவருக்கும் உள்ள தொடர்பு: கிடைத்துள்ள தகவல்களால் பரபரப்பு
கடந்த சனிக்கிழமை, கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ஒரு சிறிய செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால், அந்த சிறிய செய்திக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருப்பது தற்போது தெரியவந்துள்ளதையடுத்து பொலிசார் பரபரப்படைந்துள்ளார்கள்.
ஆம், அந்த விமான விபத்தில் பலியானவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல என தெரியவந்துள்ளது. அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் Gene Karl Lahrkamp என்பவர். இவர் ஒரு சர்வதேச குற்றவாளி. பணத்துக்கு கொலை செய்பவர். அவருடன் கிடைத்த மற்றொரு உடல் Matthew Dupre (36) என்பவருக்குச் சொந்தமானது.
கனேடிய இராணுவ பின்னணி கொண்ட இந்த இருவரும், இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், தாய்லாந்துக்குச் சென்று, இந்திய கேங்ஸ்டரான Jimi Sandhu என்ற நபரை சுட்டுக் கொன்றதாக தாய்லாந்து பொலிசார் குற்றம் சாட்டியுள்ளார்கள். இருவர் மீதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூன்றாவது நபர் Duncan Bailey (37) என்பவர். இவர் வான்கூவரில் 2020 அக்டோபர் 6ஆம் திகதி, Mir Hussain என்பவர் சுடப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். இந்த Mir Hussain அன்று உயிர் தப்பினாலும், 2021ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
விபத்தில் உயிரிழந்த நான்காவது நபர் Hankun Hong (27) என்பவர், இவர் Richmondஐச் சேர்ந்தவர்.
விபத்தில் பலியானவர்களில் இருவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதால், இந்த நால்வருக்குள்ளும் என்ன தொடர்பு, அவர்கள் என்ன நோக்கத்துகாக ஒன்றிணைந்தார்கள், குற்றச்செயல் எதையாவது செய்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்பதை அறிவதற்காக பொலிசார் பரபரப்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022