மெஸ்ஸியின் புதிய டீ சர்ட் விற்பனை வந்தது! விலை எவ்வளவு தெரியுமா? வாங்க குவிந்த மக்கள்
பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பாரிஸ் செயிண்ட் ஜெர்மனை அணியில் இணைந்த நிலையில், அவரின் டீசர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கால்பாந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்(PSG) அணியில் இணைந்தார்.
இதற்கு முன்னர் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். ஆனால், பொருளாதாரத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மெஸ்ஸி Paris Saint-Germain F.C. அணியில் இணைந்தார்.
இதையடுத்து நேற்று மெஸ்ஸி பாரிஸிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்பே Paris Saint-Germain விற்பனை கூடத்திற்கு முன்பாக ரசிகர்கள் குவிந்தனர்.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று, நேற்று மெஸ்ஸியின் புதிய டீ சர்ட் விற்பனைக்கு வரவில்லை. ஏனெனில் பார்சிலோனா அணியில் இருக்கும் போது, மெஸ்ஸி 10 எண் கொண்ட டீசர்ட்டில் விளையாடினார்.
ஆனால் இப்போது இந்த அணியில் ஏற்கனவே நெய்மர் அந்த எண் கொண்டு விளையாடுவதால், மெஸ்ஸிக்கு என்ன எண் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி மெஸ்ஸி, 30 என்ற எண்ணை தெரிவு செய்துள்ளார்.
அந்த 30 எண் கொண்ட மெஸ்ஸியின் PSG அணிக்கான டீ சர்ட், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள PSG காட்சிக்கூடத்திலும், இணையத்தளத்திலும் இது கிடைக்கிறது.
அதில் சிறுவர்களுக்கான சீருடை 82.99 யூரோவாகவும்(7,232 ரூபாய்) , பெரியவர்களுக்கான டீ சர்ட் 157.99 யூரோவாகவும்(13769 ரூபாய்) விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.