400 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி கிளப்பில் இணையும் லியோனல் மெஸ்ஸி
கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளத்துடன் சவுதி கிளப்பில் மெஸ்சி ஒப்பந்தமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
400 மில்லியன் யூரோ ஒப்பந்தம்
அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அல்-ஹிலால் வழங்கும் ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோக்கள் (ரூ. 35,34,94,53,428) என்ற பயங்கரமான சலுகையுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெறுவார்.
Credit: Alamy Stock Photo
ரொனால்டோவை விட இருமடங்கு சம்பளம்
இந்த சலுகை போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம். சவுதியின் அல்-நஸ்ர் கிளப்பில் அவருக்கு 200 மில்லியன் யூரோக்கள் (ரூ.17,67,47,26,714) வழங்கப்பட்டது.
Getty
PSG-லிருந்து வெளியேறும் மெஸ்ஸி
லீக் 1 கிளப்பிலிருந்து அவர் வெளியேறுவதை பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப் உறுதிப்படுத்திய பின்னர், மெஸ்ஸி ஜூன் 6-ஆம் திகதி புதிய கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
PSG மேனேஜர் கிறிஸ்டோஃப் கால்டியர் வியாழன் பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஆறு முறை கோல்டன் பூட் வெற்றியாளரான மெஸ்ஸி சீசனின் முடிவில் ஜூன் 30 அன்று புறப்படுவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
Shutterstock
அல்-ஹிலால் கிளப்பில்
மேலும் சமீபத்திய மாதங்களில், மெஸ்ஸி சவூதி அரேபியாவுக்குச் சென்று வருவது தெரியவந்தது.
தற்போது, சவுதி கிளப்கள் ஏழு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. நைஜீரிய வீரர் ஓடியன் இகாலோ இந்த கோடையில் அல்-ஹிலால் கிளப்பில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் நைஜீரிய வீரரின் இடத்தை மெஸ்ஸி கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lionel Messi, Saudi Arabia club, Cristiano Ronaldo, Paris Saint-Germain, Al-Hilal,