ஜாம்பவான் மெஸ்ஸி கையெழுத்திட்ட 'அர்ஜென்டினா 10' ஜெர்சி ஏலம்
கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த கையெழுத்திடப்பட்ட 'அர்ஜென்டினா 10' ஜெர்சி தொண்டு நோக்கத்திற்காக ஏலம் விடப்பட்டது.
நடிகை மிர்தா லெக்ராண்ட் வழங்கிய நன்கொடை
2022 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த, அவரது கையெப்பம் கொண்ட 'அர்ஜென்டினா 10' ஜெர்சியை, 95 வயதான நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மிர்தா லெக்ராண்ட் (Mirtha Legrand) நன்கொடையாக வழங்கினார்.
மிர்தா லெக்ராண்ட் அதை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) நட்சத்திரமான மெஸ்ஸியின் தாய் செலியா குசிட்டினி மூலம் பெற்றார்.
PHOTO: REUTERS
கையொப்பமிடப்பட்ட மெஸ்ஸியின் ஜெர்சியின் தொடக்க ஏலம் 2,700 அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த ஏலத்தில் ஏராளமான மக்களின் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், இந்த ஜெர்சி இறுதியில் எவ்வளவு டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட்டது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஏலத்தில் கிடைக்கும் வருமானம்
இந்த ஏலத்தின்மூலம் கிடைக்கும் வருமானம் XXIII FUNDAMI Solidarity Gala Dinner-ன் கட்டமைப்பிற்குள் Victorio Tetamanti தாய் மற்றும் குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும்.
இந்த ஏலத்திற்கு முன், மிர்தா லெக்ராண்ட் மெஸ்ஸியின் ஜெர்சியை எப்படிப் பெற்றார் என்பதையும் வெளிப்படுத்தினார். மேலும், மெஸ்ஸியின் தாயார் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நற்செயலுக்காக பாராட்டியதாக தெரிவித்தார்.