ரொனால்டோவின் சாதனையை முந்திய மெஸ்ஸி! கீப்பரை குழப்பி போட்ட கோல் வீடியோ
ரொனால்டோவின் மிகப்பெரிய சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
மெஸ்ஸி அணி வெற்றி
நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் PSG அணி வெற்றி பெற்றது. மாண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி அணி பங்கேற்ற நிலையில் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி தன்னிடம் வந்த பந்தை கோல்கீப்பரின் அருகே கொண்டு சென்று, அவரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.
HIGHLIGHTS | Montpellier 1 - 3 PSG I FABIAN RUIZ, MESSI, ZAÏRE-EMERY ⚽️
— Paris Saint-Germain (@PSG_inside) February 1, 2023
Revivez les meilleurs moments de la rencontre !#??????? pic.twitter.com/zBZsFpNAAY
697வது கோல்
இது டாப் 5 ஐரோப்பிய லீக்களில் மெஸ்ஸியின் 697வது கோலாகும், இதன் மூலம் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோவை விட 84 குறைவான ஆட்டங்களில் இதை மெஸ்ஸி சாதித்துள்ளார்.