பார்சிலோனாவிற்கு எதிராக கருத்து., மெஸ்ஸியின் சகோதரர் ரசிகர்களிடம் மன்னிப்பு
பார்சிலோனா குறித்து கருத்து தெரிவித்ததற்காக மெஸ்ஸியின் சகோதரர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பார்சிலோனா குறித்த தனது ஆவேசமான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சகோதரர் மத்தியாஸ் மெஸ்ஸி (Matias Messi) நேரம் ஒதுக்கியுள்ளார்.
மத்தியாஸ் மெஸ்ஸி பார்சிலோனாவின் வரலாறு மற்றும் அதன் தலைவர் ஜோன் லபோர்டாவுக்கு எதிராக சமீபத்தில் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், தனது சகோதரன் லியோனல் மெஸ்ஸி வரும் வரை பார்கா ஒரு சிறிய கிளப் என்று கூறினார்.
Twitter@BarcaUniversal
அவரது கருத்துகள் அடங்கிய வீடியோ பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தனது கருத்துக்களுக்காக மன்னிப்பை கேட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, "சமூக வலைப்பின்னல்களில் நான் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்: நான் என் மகன் மற்றும் எனது நண்பர்களுடன் நகைச்சுவையாக இருந்தேன்" என்று அவர் எழுதினார்.
EFE
"எனது குடும்பத்திற்கும் லியோவிற்கும் நிறைய வழங்கிய பார்சிலோனா போன்ற பெரிய கிளப்பையும், அவர்களின் வரலாற்றையும் பற்றி நான் எப்படி தவறாக நினைக்கப் போகிறேன்? எங்களைப் பொறுத்தவரை, கேட்டலோனியா எங்கள் இரண்டாவது வீடு, அது நன்கு அறியப்பட்டதாகும். நான் மிகவும் வருந்துகிறேன், அனைவரிடமும், குறிப்பாக பார்சிலோனா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.