இறுதியில் முடிவை அறிவித்த லியோனல் மெஸ்ஸி: இணையும் புதிய அணி இது தான்
அர்ஜென்டினா கால்பந்து உச்ச நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தனது இறுதி ஆட்டத்தை PSGக்காக வார இறுதியில் விளையாடியுள்ள நிலையில் தற்போது தமது புதிய அணி நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர் மியாமியில் சேர முடிவு
அர்ஜென்டினா கால்பந்து உச்ச நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி MLS அணியான இன்டர் மியாமியில் சேர முடிவு செய்துள்ளார். இரண்டு வருடங்கள் பிரெஞ்சு தலைநகரில் இருந்த பிறகு, ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் , மெஸ்ஸி PSG-யை விட்டு இந்த மாத இறுதியில் வெளியேறுகிறார்.
@getty
இந்த நிலையில் 35 வயதான மெஸ்ஸி இன்டர் மியாமியில் சேர முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்சிலோனா அணி நிர்வாகம் முன்வைத்த வாய்ப்புகளை நிராகரித்துள்ள மெஸ்ஸி சவுதி அரேபிய அணியில் சேர இருப்பதாக வெளியான தகவல்களையும் பொய்யாக்கியுள்ளார்.
இன்டர் மியாமி அணியானது 5 ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாக்கப்பட்டது. இதன் உரிமையாளர்களில் ஒருவர் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் என்பது குறிப்பிடத்தக்கது.
@getty