கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஃபிட்டாக, சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? டயட் ரகசியம் இதுதான்
உலகமே உச்சரிக்கும் பெயராக லியோனல் மெஸ்ஸியின் பெயர் தற்போது மாறியுள்ளது என கூறினால் அது மிகையாகாது..!
கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல அவரே முக்கிய காரணம் என்ற நிலையில் இந்த வெற்றியை பெற, அவர் எடுத்த முயற்சிகள் என்ன, அவருடைய உடல் எப்படி இதற்கு ஒத்துழைத்தது?
மெஸ்ஸின் டயட் ரகசியம் என்ன?
இத்தாலியைச் சேர்ந்த கியூலியானோ போசர் என்னும் ஊட்டச்சத்து நிபுணர் தான் மெஸ்ஸிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உணவுத் திட்டத்தை வகுத்துக் கொடுக்கிறார்.
தண்ணீர் (water), ஆலிவ் எண்ணெய் (olive oil), முழு தானியங்கள் (whole grains), பழங்கள் (fresh fruits), புதிய காய்கறிகள் (fresh vegetables) இவை ஐந்தும் கட்டாயம் மெஸ்ஸியின் டயட்டில் கட்டாயம் இருக்கும்.
wikipedia
மெஸ்ஸி அதிகம் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார். சைவ உணவுகளையே அதிகமாக விரும்பி சாப்பிடுவார். அவருடைய எல்லா வேளை உணவிலும் ஃபிரஷ்ஷான காய்கறிகள், பழங்கள் இருக்க வேண்டுமாம்.
மெஸ்ஸியின் ஆல் டைம் ஃபேவரட் ஒரு சிக்கன் உணவு தான். அதன் பெயர் லியோ. இந்த டிஷ் வேர் காய்கறிகளுடன் சிக்கன் சேர்த்து செய்யப்படுகிறது.
மெஸ்ஸி தன்னுடைய இளம் வயதில் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடுவாராம். 18 வயதில் இருக்கும் உடல் 30 வயதில் இருக்காது என்பார்கள். அதற்கு ஏற்றபடி தன்னுடைய உணவுப் பழக்கத்தையும் மாற்றும்போது அதிகமாக மாமிசங்கள் எடுத்துக் கொள்வதை கஷ்டப்பட்டு குறைத்துக் கொண்டாராம்.
Getty