லியோனல் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாவிற்கு செல்வாரா? தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி சொன்ன தெளிவான பதில்
லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தனது மகன் எதிர்காலம் குறித்த புதிய தகவலை வழங்கினார்.
2022 FIFA உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி மீண்டும் முன்னாள் கிளப் பார்சிலோனாவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
சீசனின் முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒப்பந்தம் இல்லாமல் மெஸ்ஸியின் எதிர்கால நகர்வு தீர்மானிக்கமுடியாமல் உள்ளது.
Getty Images
மெஸ்ஸி தனது முன்னாள் கிளப் பார்சிலோனாவிற்குத் திரும்பலாம் என்று ஊகங்கள் உள்ளன, ஆனால் அவரது தந்தை அத்தகைய பேச்சை நிராகரித்தாது மட்டுமல்லாமல், அவர் பார்சிலோனா கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டாவுடன் தொடர்பில் இல்லை என்றும் கூறுகிறார்.
அவர் கூறியதாவது, "லியோ மீண்டும் பார்காவுக்காக விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை., நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நாங்கள் லபோர்டாவுடன் பேசவில்லை, அங்கிருந்து எந்த சலுகையும் இதுவரை வரவில்லை." என்று தெளிவாக கூறினார்.
Lionel Messi And Jorge Messi
PSG அணி
PSG அணி மெஸ்ஸியுடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், கிளப் மெஸ்ஸியை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் கிளப்பிற்காக விளையாட விரும்புவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை நீட்டிப்பது "மிகவும் மோசமான யோசனை" என்று PSG அணிக்கு முன்னாள் பிரான்ஸ் சர்வதேச வீரர் Jerome Rothen எச்சரித்துள்ளார்.
இதனிடையே, MLS அமைப்பான இன்டர் மியாமியும் மெஸ்ஸியை ஒரு இலவச பரிமாற்றத்தில் (free transfer) ஒப்பந்தம் செய்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.