உலகக் கோப்பை நாயகன் மெஸ்ஸி, தோனி மகளுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! புகைப்படங்கள்
தோனி மகளுக்கு சிறப்பு பரிசை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் லியோனல் மெஸ்ஸி.
தோனி - மெஸ்ஸி
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி எந்தளவிற்கு கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளாரோ அதே அளவிற்கு கால்பந்து மீதும் தீரா காதலைக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
மேலும், முன்பு ஒருமுறை ஒரு தொகுப்பாளர் 'உங்களுக்கு பிடித்த காலபந்து வீரர் யார்?' என்ற கேள்விக்கு, ஜிடேன், மெஸ்ஸி என தோனி பதிலளித்திருப்பார். அதேபோல, தோனியின் மகளான 7 வயதான ஷிவா சிங் தோனியும் மெஸ்ஸியின் தீவிர ரசிகையாவார்.
Getty/instagram ziva
தோனி மகளுக்கு பரிசு கொடுத்த மெஸ்ஸி
இந்நிலையில், மெஸ்ஸியிடம் இருந்து ஷிவாவுக்கு பிரத்யேக் பரிசு ஒன்று வந்துள்ளது. மெஸ்ஸி தன்னுடைய அர்ஜென்டீனா ஜெர்ஸியில் PARA ZIVA (ஷிவாவிற்காக) என எழுதி அதன் கீழ் கையெழுதிட்டு தந்துளளார்.
இதுகுறித்த புகைப்படம், ஷிவா சிங் தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அந்த பதிவில், மெஸ்ஸியின் ஜெர்ஸியை கண்டு மகிழ்ச்சியுடன் காணப்படும் ஷிவாவின் புகைப்படங்களுடன்,"தந்தையை போல மகளும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.