மெஸ்ஸிக்கு காயம்..! கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி!
மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஜென்டினாவின் கோபா அமெரிக்கா கனவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,
மெஸ்ஸி காயம்
37 வயதான நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தொடர் தொடை தசை பிரச்சையால் முக்கியமான கால் இறுதிப் போட்டியை தவறவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலிக்கு எதிரான போட்டியின் போது மெஸ்ஸிக்கு அசௌகரியம் ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கையாக, பெருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் களமிறங்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ESPN ஆர்ஜெண்டினாவின் லியோ பரடைசோவின்(Leo Paradizo) அறிக்கைகள், பிரச்சனை மிகவும் தீவிரமாக இருக்கலாம் என்றும், இதனால் மெஸ்ஸி கால் இறுதிப் போட்டியை முழுவதுமாக தவற விட வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றன.
இந்த செய்தி மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கோபா அமெரிக்காவில் அர்ஜெண்டினாவின் செயல்திறன் இதுவரை மோசமாக இருந்தது.
கனடா மற்றும் சிலிக்கு எதிராக வெற்றி பெற்றாலும், இரண்டு வெற்றிகளும் நம்பிக்கை தரும் வகையில் இல்லை.
மெஸ்ஸி, வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும், அவரால் சுயமாக கோல் அடிக்க முடியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |