தனது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு மெஸ்ஸி கொடுத்த சிறப்பு பரிசு! புகைப்படங்கள்
கத்தார் உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ள நிலையில் அதற்கு முக்கிய காரணமாக ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இருந்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி திருமணம்
மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் சுவாரசியங்கள் பல இருப்பது போல தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சுவாரசியங்கள் இருக்கிறது. மெஸ்ஸிக்கும், அவரின் பள்ளி பருவத்தில் இருந்து தோழியாக இருக்கும் அன்டோனெலா ரோகுஸ்ஸோ என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் 260 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். வந்தவர்களுக்கு மெஸ்ஸி கொடுத்த பரிசு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
AFP PHOTO / EITAN ABRAMOVICHEITAN ABRAMOVICH/AFP/Getty Images
விருந்தினர்களுக்கு பரிசு
இந்த தகவலை சக அர்ஜென்டினா கால்பந்து வீரரான பப்லோ ஜபலேடா வெளியிட்டுள்ளார். அதன்படி தனது திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மெஸ்ஸி சிறப்பு wine மது போத்தல்களை வழங்கியிருக்கிறார்.
இது குறித்து பப்லோ கூறுகையில், விலையுயர்ந்த அந்த மது போத்தலில் மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றிருந்தது கூடுதல் சிறப்பாகும்.
Malbec வகையை சேர்ந்த மிகப்பெரிய மது போத்தலை எனக்கு கொடுத்தார், அதை பிரித்தானியாவுக்கு எடுத்து செல்லவே கடினமாக இருந்தது, ஏனெனில் என்னிடம் ஏற்கனவே பையில் நிறைய பொருட்கள் இருந்தது என கூறியுள்ளார்.
goal