'மரடோனா உயிருடன் இல்லையே..' உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸிக்கு வருத்தமளிக்கும் விடயம்
டியாகோ மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து FIFA உலகக்கோப்பையை பெற விரும்புவேன் என்று லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா கேப்டனும், எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கத்தாரில் நடந்த 2022 உலகக்கோப்பையை (FIFA World Cup 2022) மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா தன்னிடம் ஒப்படைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
டியாகோ மரடோனா
2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் திகதி உடல்நலக் கோளாறுகள் காரணமாக காலமான டியாகோ மரடோனா (Diego Maradona), அர்ஜென்டினா இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கால்பந்து வீரராக பரவலாகக் கருதப்பட்டார்.
Getty images
அர்ஜென்டினா (Argentina) தேசிய அணியுடன் சர்வதேச கோப்பை எதுவும் இல்லாததால், மெஸ்ஸி தனது வாழ்நாள் முழுவதும் 1986-ல் உலகோப்பையை வென்று கொடுத்த புகழ்பெற்ற மரடோனாவின் நிழலில் வாழ்ந்தார்.
லியோனல் மெஸ்ஸி
2021 முதல் கோபா அமெரிக்கா (Copa America), பைனலிசிமா (Finalissima) மற்றும் கத்தாரில் நடந்த FIFA உலகக் கோப்பை 2022 ஆகியவற்றை அடுத்தடுத்து வென்று மெஸ்ஸி தனது தேசிய அணிக்கு பெருமை சேர்த்தார்.
FIFA உலகக் கோப்பை பற்றி பேசிய மெஸ்சி, அர்ஜென்டினா கோப்பையை வெல்வதை மரடோனா பார்ப்பார் என்று நம்புவதாக கூறினார்.
அவர் இருந்திருந்தால்..,
"உலகக்கோப்பையை அவர் கையால் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் இதையெல்லாம் பார்க்க அவர் இருந்திருந்தால், நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன்" என்று மெஸ்ஸி ஸ்பானிஷ் வானொலி நிகழ்ச்சில் கூறினார்.
Instagram @leomessi
"அவரும் என்னை நேசிக்கும் பலரும் மேலே இருந்து என்னை முன்னே தள்ளுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், இதற்காக மட்டுமல்ல, பொதுவாக எல்லாவற்றுக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வானொலி நிகழ்ச்சில், உலகக் கோப்பை போட்டியின்போது நெதர்லாந்து அணியுடன் ஏற்பட்ட பிரச்சினையில், கடுமையாக பேசியதற்காகவும், கோபமாக நடந்துகொண்டதற்காகவும் லியோனல் மெஸ்ஸி வருத்தம் தெரிவித்தார்.
தற்போது PSG கிளப்பில் விளையாடிவரும் மெஸ்ஸி, இந்த சீசனில் மேலும் சில பட்டங்களைச் சேர்ப்பார் என்று நம்புகிறார்.