ரொனால்டோவை தொடர்ந்து மெஸ்ஸியின் அதிரடி முடிவு: புதிய கிளப்பில் ஒப்பந்தம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸியும் இப்போது சவுதி அரேபிய கிளப்பில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெஸ்ஸி புதிய கிளப்பில் ஒப்பந்தம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கோடையில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட கால்பந்தாட்ட கிளப்பில் சேர உள்ளார் என்று ஒரு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
மெஸ்ஸி சமீபத்தில் சவுதி அரேபியாவிற்கு பயணத்தை மேற்கொண்டார், அதற்காக அவர் PSG அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேநேரம், மெஸ்ஸி சவுதி அரேபியாவில் சுற்றுலாத் தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
ஒப்பந்தம்
அவரது பயணத்தின் நோக்கம் ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவரது அடுத்த நகர்வு என்ன? என்பதும் எதிர்காலத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.
PSG கிளப்புடன் மெஸ்ஸியின் தற்போதைய ஒப்பந்தம் ஜூன் மாத இறுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில், அவரது சவுதி அரேபியா பயணத்தைத் தொடர்ந்து, "மெஸ்ஸி ஒப்பந்தத்தை முடித்துவிட்டார். அவர் அடுத்த சீசனில் சவுதி அரேபியாவில் விளையாடுவார்," என்று பிரபல ஊடகத்தில் ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Getty Images
மெஸ்ஸியின் தற்போதைய கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனில் ஜூன் 30 வரை ஒப்பந்தத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
முன்னதாக, ஜனவரி மாதம் போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் ப்ரோ லீக் கிளப்பான அல் நஸ்ருடன் (Al-Nassr) 400 மில்லியன் யூரோ எனும் பாரிய ஒப்பந்தத்தில் இணைந்தார். ஃபோர்ப்ஸ் படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் ஆவார்.