உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி அரிய சாதனை! அர்ஜென்டினா அபார வெற்றி
FIFA உலகக்கிண்ணத்தில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார்.
அர்ஜென்டினா வெற்றி
டல்லாஸில் நடந்த FIFA உலகக்கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின.

செல்ஸோ (19), மார்ட்டினெஸ் (31) மற்றும் லியோனல் மெஸ்ஸி (80) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜோர்டான் அணியின் தரப்பில் மூஸா அல்-தாமரி 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் வீரர்
கால்பந்து உலகக்கிண்ண வரலாற்றில், தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) படைத்தார்.
இதற்கு முன்பு 1958யில் ஃபோண்டைன் (பிரான்ஸ்), 1970யில் ஜெய்ர்ஸின்ஹோ (பிரேசில்) ஆகியோர் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக கோல் அடித்திருந்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |