ஜாம்பவான் மெஸ்ஸியை கௌரவப் படுத்திய PSG அணியினர்! வழங்கப்பட்ட நினைவுப்பரிசு
அர்ஜென்டினாவுக்கான FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு, கிளப்புக்கு திரும்பிய லியோனல் மெஸ்ஸிக்கு PSG அணியினரிடமிருந்து மரியாதைக்குரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
PSG-ன் பயிற்சி மையத்திற்கு வந்தவுடன், மெஸ்ஸி தனது அணியினரிடமிருந்து ஒரு மரியாதையைப் பெற்றார், மேலும் PSG-ன் ஆலோசகர் Lluis Campos அவர்களால் சிறப்பு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
கத்தாரில் தஹனது நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்ற பிறகு PSG கிளப்பிடமிருந்து லியோனல் மெஸ்ஸிக்கு 10 நாள் இடைவெளி கொடுக்கப்பட்டது.
@PSG_inside/Twitter
குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடிய மெஸ்ஸி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபிறகு, செவ்வாய்க்கிழமை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) பயிற்சிக்குத் திரும்பினார்.
வெள்ளிக்கிழமை Chateauroux-க்கு எதிரான Coupe de France மோதலுக்கு முன்னதாக இன்று (புதன்கிழமை) தனது அணியினருடன் இணைந்தார்.
இன்று PSG-ன் பயிற்சி மையத்திற்கு வந்தவுடன், மெஸ்ஸி தனது அணியினரிடமிருந்து ஒரு மரியாதையைப் பெற்றார், மேலும் PSG-ன் ஆலோசகர் Lluis Campos அவர்களால் சிறப்பு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
Une ???? ?'??????? pour notre champion du monde ! ?❤️?#BravoLeo pic.twitter.com/xsRHdfVbQS
— Paris Saint-Germain (@PSG_inside) January 4, 2023
இந்த வீடியோவை பிஎஸ்ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
@PSG_inside/Twitter