உலக கோப்பை வரலாற்றில் 800 கோல்களை அடித்து மாபெரும் சாதனைப் படைத்த மெஸ்ஸி
உலக கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி 800 கோல்களை அடித்து மாபெரும் சாதனைப் படைத்துள்ளார்.
சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா
கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.
மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி
சமீபத்தில் லயோனல் மெஸ்ஸி கிளப் கால்பந்து போட்டியில் 700 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்தார். தனது நீண்ட கால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் தற்போது இவர் இணைந்துள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ 954 போட்டிகளில் 706 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி
இந்நிலையில், பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா- பனாமா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இப்போட்டி கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த அர்ஜென்டினா அதன் பிறகு விளையாடிய முதல் சர்வதேச போட்டி இது தான்.
இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதனையடுத்து, 78-வது நிமிடத்தில் தியாகோ அல்மாடாவும், 89-வது நிமிடத்தில் கேப்டன் லயோனல் மெஸ்சியும் கோல் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, மெஸ்சி 'பிரிகிக்' வாய்ப்பில் உதைத்த பந்து அரண்போல் வரிசையாக நின்ற வீரர்களை தாண்டி வலைக்குள் புகுந்தது. அப்போது, மைதானத்தில் இருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆர்ப்பரித்தனர். அப்போது அரங்கமே அதிர்ந்து போனது.
இப்போட்டியின் முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால், இதுவரை ஒட்டுமொத்தத்தில் 800-வது கோல் அடித்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Messi scores his 800th goal with this wonderful free kick. ?
— All About Argentina ??? (@AlbicelesteTalk) March 24, 2023
pic.twitter.com/SPCY6FRjTw