கடைசி போட்டியிலும் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி: அர்ஜென்டினா ரசிகர்கள் உருக்கம்
Lionel Messi Scores In Farewell Game for Argentina: அர்ஜென்டினா அணிக்கான தனது கடைசி போட்டியில் கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி தன்னுடைய ஆட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
கடைசி போட்டியில் கோல் அடித்த மெஸ்ஸி
பியூனஸ் அயர்ஸில்(Buenos Aires) உருக்கமான மாலை நேரத்தில் நடைபெற்ற அர்ஜென்டினா அணிக்கான தன்னுடைய கடைசி கால்பந்து போட்டியில் கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) நிறைவு செய்தார்.

பெனின்(Benin) அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், 39 வயது உலக கோப்பை வெற்றியாளரும், 8 முறை பாலன் டி’ஓர்(Ballon d'Or ) விருது பெற்றவருமான லியோனல் மெஸ்ஸி, பெனால்டி பகுதியில் இருந்து ஒரு கோலையும், 2 கோல்களுக்கான உதவிகளையும் செய்து அர்ஜென்டினா அணியை 3-0 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியுள்ளார்.
நிக்கோலஸ் ஓட்டமெண்டி மற்றும் நிகோ பாஸ் ஆகிய இருவரும் கோல் அடிக்க உதவியதுடன் ஆட்டத்தின் 71 வது நிமிடத்தில் மெஸ்ஸி நேரடி கோல் ஒன்றையும் அடித்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தந்தை மறைவுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் தேசிய அணிக்கான தன்னுடைய 21 வருட பயணத்தை இண்டர்மியாமி நட்சத்திரம் நிறைவு செய்துள்ளார்.
தேசிய அணிக்காக 208 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 126 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் தேசிய அணிக்காக அதிக முறை விளையாடிய வீரர் மற்றும் அதிக முறை தேசிய அணிக்காக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.