எதிரணி வீரரின் முகத்தில் பந்தை எறிந்த மெஸ்ஸி! வெடித்த சர்ச்சை - வைரல் வீடியோ
messi throws ball at opponent's face: லியோனல் மெஸ்ஸி எதிரணி வீரரின் முகத்தில் பந்தை எறிந்தது சர்ச்சையானது.
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, எதிரணி வீரரின் முகத்தில் பந்தை எறிந்த நிகழ்வு சர்ச்சையாக வெடித்துள்ளது.
இன்டர் மியாமி தோல்வி
கொலம்பஸ் மற்றும் இன்டர் மியாமி அணிகளுக்கு இடையிலான MLS கால்பந்து தொடர் போட்டி Nu மைதானத்தில் நடந்தது.
Lionel Messi takes a throw-in off Gonzalo Tapia's face https://t.co/jX3tTuojHe
— Tom Bogert (@tombogert) November 22, 2026
இப்போட்டியில் கொலம்பஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணியை வீழ்த்தியது.
ஜாம்பவான் வீரர் மெஸ்ஸியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை என்பதால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
வீடியோ வைரல்
ஆனால், மெஸ்ஸி செய்த செயல் ஒன்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் எதிர்வினையாற்ற செய்தது.
கொலம்பஸ் வீரர் கோன்சாலோ டாபியாவின் முகத்தில் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) நிதானமிழந்து பந்தை எறிந்தார்.
அவரது இந்த செயலால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு சிவப்பு அட்டை கொடுத்திருக்க வேண்டும் என சர்ச்சை வெடித்துள்ளது. அத்துடன் இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
