மெஸ்ஸி PSG ஒப்பந்தத்தை நிராகரிக்க முடிவு., முன்னாள் கிளப்பில் இணைய திட்டம்
லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது கிளப்பான பார்சிலோனாவுக்குத் திரும்புவதற்காக PSG-ன் ஒப்பந்த நீட்டிப்பு வாய்ப்பை நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக Marca செய்தி வெளியிட்டுள்ளது.
மெஸ்ஸி 2021-ல் பார்சிலோனாவை (Barcelona) விட்டு வெளியேறி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) கிளப்பில் கையெழுத்திட்டார்.
PSG ஒப்பந்தத்தை நீட்டிக்க மாட்டார்?
"இன்றைய நிலவரப்படி, லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) நோக்கம் PSG உடனான தனது ஒப்பந்தத்தை நீட்டிப்பது அல்ல, எனவே, பாரிஸை தளமாகக் கொண்ட அணியுடன் தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாட்டார்" என்று ஸ்பானிய பத்திரிகையாளர் ஜெரார்ட் ரோமெரோ மார்கா பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.
Getty Images
கத்தார் உலகக் கோப்பை வெற்றி மெஸ்ஸியின் மனநிலையை மாற்றிவிட்டது என்று ரொமேரோ தெரிவித்துள்ளார்.
"கத்தாரில் நடந்த உலகக் கோப்பையின் வெற்றி மெஸ்ஸியின் சிந்தனை முறையை மாற்றியுள்ளது, ஏனெனில் அவர் உடனடி எதிர்காலத்திற்காக மற்ற விஷயங்களை மதிக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
மெஸ்ஸி மீதான ஊகங்கள்
பார்சிலோனா இப்போது மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்யும் முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, MLS லீகின் Inter Miami கிளப் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய திட்டமிடுவதாகவும் முன்னர் குறிப்பிடப்பட்டது.
மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் (Cristiano Ronaldo) தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி அடுத்த கோடையில் சவுதி பிரீமியர் லீக் (SPL) கிளப்பில் சேருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், இந்த வதந்திகளை சவுதி கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இப்ராஹிம் அல்காசிம் மறுத்தார்.