வில்லியம், கேட்டைப் பார்த்து ஹரியிடம் கட்டளையிட்ட மேகன்: கூறும் நிபுணர்
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனுடன் காணப்படுவதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள் என ஹரியிடம் மேகன் எச்சரித்ததாக உதட்டசைவு நிபுணர் கூறுகிறார்.
ஹரி, வில்லியம்
அரச வரலாற்றாசிரியர் ராபர்ட் லெஸி, 2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வில்லியம் தனது சகோதரரின் புதிய உறவு குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, இருவருக்குள்ளும் ஒரு கசப்பான வெடிப்பு ஏற்பட்டதாக
தனது "Battle of Brothers" புத்தகத்தில் கூறியிருந்தார்.
ஆனால், 2018ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனின் சின்னமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சகோதரர்கள் முன்னணி வகித்தனர்.
பிரித்தானியாவின் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வில் ஹரியுடன் மேகன் இருந்தார்.
இந்த ஜோடி மேலோட்டமாக அரச வாழ்க்கையில் குடியேறிவிட்டதாகத் தோன்றினாலும், அந்த நாளில் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க உரையாடல் அவர்களின் உடனடி வெளியேறும் திட்டத்தின் ஆரம்ப அறிகுறியாக இருந்திருக்கலாம் என்று உதட்டசைவு நிபுணர் நிக்கோலா ஹிக்லிங் கூறுகிறார்.
மேகன் கூறிய வார்த்தைகள்
மேலும் அவர் கூறுகையில், சேவை தொடங்கும் வரை காத்திருந்தபோது, கடுமையான முகம் கொண்ட ஹரி முன்னோக்கிப் பார்த்தார்.
அவரது மனைவி ஐந்து வார்த்தைகளைக் கூற அவரை நோக்கித் திரும்பினார்.
'சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அவர் ஹரியை அவர் கட்டளையிட்டதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் மேகன் இடைநிறுத்தி சுற்றிப் பார்த்துவிட்டு ஹரியிடம் திரும்புகிறார் என்றும் கூறும் நிக்கோலா, சற்று அதிர்ச்சியடையும் ஹரி 'இன்று?' என்று கேட்பதன் மூலம் விளக்கத்தை தேடுகிறார் என்கிறார்.
தனது மனைவியின் கோரிக்கைகளை செயல்படுத்திய பிறகு, ஹரி பின்னர் மிகவும் எளிமையான, சற்று குழப்பமான கருத்தை சொல்கிறார். அதுதான் 'Sweet'.
ஒரு உரையாடலின் முடிவில் யாரும் இந்த வார்த்தையை கூறுவதை நான் கேட்டதில்லை. ஆனால், அவர் இனிமையாக (Sweet) இருப்பதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் சொல்வார் என்று எனக்குத் தெரியவில்லை என்று நிக்கோலா சேனல் 5யிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |