லிஸ்பன் Funicular ரயில் விபத்து: உறுதிப்படுத்தப்பட்ட 3 பிரித்தானியர்கள் உயிரிழப்பு
லிஸ்பன் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 3 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
Funicular ரயில் விபத்து
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய Funicular எனும் எலெக்ட்ரிக் ஸ்ட்ரீட் கார் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதில் 22 பேர் வரை படுகாயமடைந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 பிரித்தானியர்கள் உயிரிழப்பு
இந்த ரயில் விபத்தில் மொத்தம் 16 பேர் வரை உயிரிழந்த நிலையில், அவர்களில் 11 பேரின் நாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த 5 போர்ச்சுகல் நாட்டவர்கள் அருகில் உள்ள தொண்டு நிறுவனங்களில் பணியாற்றினர்.
3 பேர் பிரித்தானிய நாட்டவர்கள், 2 பேர் கொரிய நாட்டவர்கள் மற்றும் ஒருவர் சுவிஸ் நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |