உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியல்: முதலிடம் பிடித்துள்ள நகரம் லண்டன் அல்ல
உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள்
பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது உலகின் அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றன.
அவ்வகையில், ஆறு மாதங்களுக்கொருமுறை உலகின் அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலை வெளியிடும் Numbeo என்னும் இணையதளம், சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடம் பிடித்துள்ள நகரம்
உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் ஆகும்.
பட்டியலில் இரண்டாவது இடமும் சுவிஸ் நகரம் ஒன்றிற்குத்தான். ஆம், பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நகரம் சூரிச்.
மூன்றாவது இடம் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு.
சுவாரஸ்யமான ஒரு விடயம் என்னவென்றால், உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியலில் லண்டன் இடம்பெறவில்லை!
உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள்
1. ஜெனீவா
2. சூரிச்
3. நியூயார்க்
4. சான் பிரான்சிஸ்கோ
5. போஸ்டன்
6. Reykjavik
7. வாஷிங்டன் DC
8. சியாட்டில்
9. லாஸ் ஏஞ்சல்ஸ்
10. சிகாகோ.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |