இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும்

India Plane Crash Death
By Karthikraja Jun 14, 2025 09:56 AM GMT
Report

விமான விபத்தில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.

இந்த விமானத்தில், பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், விஷ்வாஸ் குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைக்க, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். 

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

[PB3OXIQ

இந்தியாவில் இதற்கு முன்னர் பலமுறை விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்துள்ளன. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

பல்வந்த்ராய் மேத்தா

குஜராத்தின் 2வது முதலமைச்சர் பல்வந்த்ராய் மேத்தா, 1965 போரின் போது, ​​பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானம் தவறுதலாக அவரது சிவிலியன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் உயிரிழந்தார். அவர் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அதிகாரப்பூர்வ பயணமாக சென்றிருந்தார்.

ஹோமி பாபா

ஹோமி பாபா

இந்தியா அணுசக்தி துரையின் தந்தையாக கருதப்பட்ட ஹோமி பாபா, 1966 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஒரு மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பிரான்சின் மான்ட் பிளாங் மறைப்பகுதியில் அவர் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

மோகன் குமாரமங்கலம்

மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மோகன் குமாரமங்கலம், 1973 ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தார். 

மோகன் குமாரமங்கலம்

இவரது பேரன் முக்தேஷ் முகர்ஜி மற்றும் அவரது மனைவி சியாவோமாவோ பாய் ஆகியோர், 2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 370 இல் இருந்த 2 கனேடிய பயணிகளில் அடங்குவர்.

ராணி சந்திரா

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துவரும், மிஸ் கேரளாவுமான ராணி சந்திரா, 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தார்.

சஞ்சய் காந்தி

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, கடந்த 1980 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி, குட்டி விமானத்தில் சாகசத்தில் ஈடுபட்ட போது, விபத்தை சந்தித்து, தனது 33 வயதில் உயிரிழந்தார்.

என்.வி.என் சோமு

திமுகவை சேர்ந்த என்.வி.என் சோமு, மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சராக பதவி வகித்தார். 1997 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி, ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் சென்றபோது நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இவரது மகள் கனிமொழி சோமு தற்போது திமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.

மாதவ்ராவ் சிந்தியா

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியா, 2001 ஆம் ஆண்டு பேரணி ஒன்றில் உரையாற்றுவதற்காக தனி விமானத்தில் சென்ற போது, விமான விபத்தை சந்தித்து, அதில் உயிரிழந்தார்.

ஜிஎம்சி பாலயோகி

அப்போதைய மக்களவை சபாநாயகரும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவருமான ஜிஎம்சி பாலயோகி , மார்ச் 3, 2002 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த நடுவானில் ஹெலிகாப்டர் ஏற்பட்ட கோளாறால், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

சௌந்தர்யா

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சௌந்தர்யா, 2004 ஆம் ஆண்டு பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு தனது சகோதரருடன் பயணித்தார். 2 மாத கர்ப்பமாக இருந்த அவர், விமானம் வெடித்து சிதறிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

விமான விபத்து குறித்து முன்னாள் மனைவிக்காக பதிவிட்ட தமிழ்ப்பட நடிகர்

விமான விபத்து குறித்து முன்னாள் மனைவிக்காக பதிவிட்ட தமிழ்ப்பட நடிகர்

ஓ.பி.ஜிண்டால் மற்றும் சுரேந்தர் சிங்

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

பிரபல தொழிலதிபரும், ஹரியானா மாநில முன்னாள்அமைச்சருமான ஓ.பி. ஜிண்டால், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேந்தர் சிங்குடன் (முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் மகன்) மார்ச் 31, 2005 அன்று உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

ஆந்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, செப்டம்பர் 2, 2009 அன்று நல்லமலா மலைகளில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

டோர்ஜி காண்டு

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வராக இருந்த டோர்ஜி காண்டு, ஏப்ரல் 30, 2011 அன்று சீன எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூரப் பகுதியில் தனது பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இறந்தார். 5 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பிபின் ராவத்

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகளும் உயிரிழந்த பிரபலங்களும் | List Of India Celebrities Dies In Plane Crash

இந்தியாவின் முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத், டிசம்பர் 8, 2021 அன்று குன்னூரில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார்.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US