பாகிஸ்தான் மண்ணில் விளையாடாத இந்திய நட்சத்திர வீரர்கள் யாவர் தெரியுமா?
பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடாத இந்திய வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.
நட்சத்திர வீரர்கள்
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாவில்லை.
இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
தற்போதைய அணியில் விளையாடும் ரோஹித், கோஹ்லி சில வீரர்கள் இதுவரை பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை.
ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள்
1. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை.
2. விராட் கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக பல போட்டிகள் சதம், அரைசதம் விளாசியுள்ளார். ஆனால் அவற்றில் ஒரு போட்டி கூட பாகிஸ்தானில் நடந்ததில்லை.
3. 268 ஒருநாள் போட்டிகள், 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா பாகிஸ்தானில் ஒரு பந்தை கூட சந்தித்ததில்லை.
4. சேடேஸ்வர் புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரராக இருந்தாலும், பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை.
5. 195 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள அஜிங்க்ய ரஹானே (Ajinkya Rahane) இந்திய அணியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால் ஒரு பந்தைக்கூட அவர் பாகிஸ்தான் மண்ணில் எதிர்கொண்டதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |