ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தொழிலதிபர்கள்.. நாட்டை விட்டு ஓடியது முதல் சிறைவாசம் வரை
ஒரு காலகட்டத்தில் தொழிலில் வளர்ச்சியடைந்து கொடிகட்டி பறந்த தொழிலதிபர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
சுயமாக தொழில் செய்து அதில் முன்னேறி நல்ல நிலைக்கு வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. போட்டி மற்றும் கடின சூழ்நிலைகளை கடந்து தான் அந்த இடத்திற்கு வர முடியும். ஆனால் நாம் நல்ல வளர்ச்சியில் இருந்து தோல்வியை சந்தித்த தொழிலதிபர்கள் பற்றி பார்க்கலாம்.
மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங்
சகோதரர்களான மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் Ranbaxy Laboratories என்ற பார்மா நிறுவனத்தை உலகளவில் நடத்தி வந்தனர். 2016 -ம் ஆண்டின் தகவலின் படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 1.38 பில்லியன் டொலர்களுடன் 92 -ம் இடத்தில் இருந்தனர்.
இவர்கள் 2008 -ம் ஆண்டு பர்மா நிறுவனத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்தனர். பின்பு, 2016 -ம் ஆண்டு பர்மா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி இவர்கள் மீது குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனால், கடன் ஏற்பட்டு தொழில் முழுமையாக முடங்கியது.
விஜய் மல்லையா
Kingfisher Airlines, United Spirit, Mangalore chemicals and Fertilizers and Berger Paints என்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர், கிங் ஆஃப் குட் டைம்ஸ் என்று அழைக்கப்பட்டவர் தான் விஜய் மல்லையா. இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை.
2012 -ம் ஆண்டு இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர். இவர் வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி பணத்தை கடனாக பெற்று அதனை திருப்பி செலுத்ததாமல் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதனால், இவரது சொத்துக்களை அரசு முடக்கியது.
மெகுல் சோக்ஸி
கீதாஞ்சலி நகைக்கடையை நிறுவியவர் தான் மெகுல் சோக்ஸி. இவரும், இவரின் சகோதரரும் சேர்ந்து நாடு முழுவதும் 4000 கடைகளை கொண்ட கீதாஞ்சலி குழுமத்தை நடத்தி வருகின்றனர்.
இவர், பஞ்சாப் தேசிய வங்கி ரூ.3,000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்படடார். பின்னர், இந்தியாவிலிருந்து ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டிற்கு தப்பிச் சென்று குடியுரிமை பெற்றார்.
நிரவ் மோடி
டைமண்ட் தொழிலை நடத்தி வந்தவர் நிரவ் மோடி. இவரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13,000 கோடி சொத்து இருந்தது. இவர், பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர், ரூ.30,000 கோடி கடன் உள்ள நிலையில் தப்பி ஓடினார். தற்போது, லண்டன் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ராணா கபூர்
எஸ் வங்கி நிறுவனரான ராணா கபூர். இவரது வங்கி மூலமாக ரூ.30,000 கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ.20,000 கோடியை திரும்ப பெறாத கடனாக கணக்கு காட்டியுள்ளார். இதனால் இவரது வங்கி திவால் நிலைக்கு சென்றதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |