உலகில் அதிகம்பேர் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகள் பட்டியல்: பிரான்சுக்கு மீண்டும் முதலிடம்
உலகில் அதிகம்பேர் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகள்
2024ஆம் ஆண்டில், உலகில் அதிகம்பேர் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2023இலும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் பிரான்ஸ்தான் முதலிடம் பிடித்தது.
பிரான்சுக்கு, 2024ஆம் ஆண்டில், 100 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகைபுரிந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஸ்பெயினும் இந்த விடயத்தில் தங்களுடன் போட்டி போடுவதாக பிரான்ஸ் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினுக்கு 2024ஆம் ஆண்டில், வருகைபுரிந்த சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 94 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |