2024ஆம் ஆண்டின் வலிமையான ஆசியர்கள் பட்டியல்: முதலிடத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி
பிரித்தானியாவில் வாழும் 101 வலிமையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தெற்காசியர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
GG2 Power List 2024
GG2 Power List என்னும், பிரித்தானியாவில் வாழும் 101 வலிமையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தெற்காசியர்கள் பட்டியலில் (UK’s 101 most influential and powerful South Asians in Britain) மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி.
இரண்டாவது இடத்திலிருப்பவர் லண்டன் மேயரான சாதிக் கான், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான சர் ரபீந்தர் சிங்.
British Asian Trust and Chanel என்னும் அமைப்பின் தலைவரான ஜித்தேஷ் காதியா நான்காவது இடத்தையும், Chanel என்னும் ஃபேஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான லீனா நாயர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
Photo by HENRY NICHOLLS/AFP via Getty Images
என் வீட்டிலேயே நான் வலிமையான ஆசியர் கிடையாது
நிகழ்ச்சியில் பேசிய ரிஷி, தன் மகள்கள் இருவரையும் ஜாலியாக கேலி செய்வதற்காக, இரண்டு மகள்களின் தந்தை என்னும் முறையில், என் வீட்டிலேயே நான் வலிமையான ஆசியர் கிடையாது என வேடிக்கையாகக் கூறினார்.
Photo by John Lamparski/Getty Images for Concordia Summit
அத்துடன், தெற்காசிய பாரம்பரியத்தில் வந்த, பிரித்தானியாவின் முதல் பிரதமர் என்பதிலும் தான் பெருமை அடைவதாகத் தெரிவித்த ரிஷி, ஆனால், அது ஒரு விடயமே அல்ல என்றும், ஏனென்றால், நாம் வாழும் நாடு அப்படிப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு என்றும் கூறினார்.
Photo by Isabel Infantes – WPA Pool/Getty Images
Photo by Samir Hussein/Getty Images for BoF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |