இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! தமிழக வீரருக்கு வாய்ப்பு
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5ம் திகதி தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய பிளேயிங் லெவன் விவரம்: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த சர்மா, பும்ரா, சபாஷ நதீம். கோஹ்லி, இஷாந்த சர்மா, பும்ரா, தமிழக வீரர் அஸ்வின் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன் விவரம்: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர், டொமினிக் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன். ரோரி பர்ன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்-க்கு இது 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.