ஆன்டி பர்னாம் பிரதமராக பதவியேற்றதும் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் பிரதமரானதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஆன்டி பர்னாம் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்?
ஆன்டி பர்னாம் பிரதமரானதும் மின் கட்டணம் மீதான மதிப்புக்கூட்டு வரியை நீக்குவதாக அறிவித்தது என்னவோ உண்மைதான்.

அதே நேரத்தில், ஒரு வழக்கமான அரசியல்வாதியாக (Typical politician), அவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆம், தான் பிரித்தானிய பிரதமரானதும், முந்தைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ஆதரவாளர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார், சிலரை பதவியிறக்கமும் செய்துள்ளார் ஆன்டி பர்னாம்.
அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் இதோ:
ரேச்சல் ரீவ்ஸ்: நிதி அமைச்சர்

டேவிட் லாமி: துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளர்
ஸ்டீவ் ரீட்: வீட்டுவசதி செயலாளர்
பீட்டர் கைல்: வணிகச் செயலாளர்
லார்ட் ரிச்சர்ட் ஹெர்மர்: அட்டர்னி ஜெனரல்
லிஸ் கெண்டல்: அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பச் செயலாளர்
ஜோ ஸ்டீவன்ஸ்: வெல்ஷ் செயலாளர்
ஹிலாரி பென்: வடக்கு அயர்லாந்து செயலாளர்
டேரன் ஜோன்ஸ்: பிரதமரின் தலைமைச் செயலாளர்

ஜென்னி சாப்மேன்: மேம்பாட்டுத்துறை அமைச்சர்
நிக் தாமஸ்-சைமண்ட்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் அமைச்சர் மற்றும் ஊதியப் பொது மேலாளர்
அதே நேரத்தில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் கெய்ர் ஸ்டார்மருக்கு தலைவலியை ஏற்படுத்தி, அவர் ராஜினாமா செய்ய காரணமாக இருந்த, வேறு வகையில் கூறினால், ஆன்டி பர்னாம் பிரதமர் ஆவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்த, ஜான் ஹீலி, வெஸ் ஸ்ட்ரீட்டிங் மற்றும் மியாட்டா ஃபன்புல்லா ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும் தவறவில்லை ஆன்டி பர்னாம்.
சமீபத்தில், ஆனலீஸ் மிட்க்லீ என்பவருக்கு, ஆன்டி பர்னாம், chief whip என்னும் பொறுப்பு வழங்கியது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இப்போது பதவியிலிருக்கும், மற்றும் பதவிநீக்கம், பதவியிறக்கம் செய்யப்பட்ட அனைத்து லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசுக்கு உண்மையாக இருக்கவைக்க முயற்சிப்பதுதான் chief whip பொறுப்பிலிருக்கும் ஆனலீஸ் மிட்க்லீயின் வேலை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |