டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்துள்ள இமாலய சாதனைகள்
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ள சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விராட் கோலி ஓய்வு
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானார்.
இதனையடுத்து, டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார்.
விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, 30 சதம், 31அரை சதம் உட்பட 9,230 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சாதனை பட்டியல்
இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்று தந்து, அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியை, கோலி தலைமையிலான இந்திய அணி வென்றதன் மூலம், அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அணித்தலைவராக அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை கோலி (20 சதங்கள்) பெற்றுள்ளார். 25 சதங்களுடன், தென் ஆப்பிரிக்காவின் கிரீம் சுமித் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
அணித்தலைவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரே வெளிநாட்டு டெஸ்ட் தொடரில், நான்கு சதங்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்டக்காரர்கள் தரவரிசையில், அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |