2023-ல் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 உணவுகளின் பட்டியல்: வெளியான அறிக்கை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்தைகளில் மிகமுக்கியமான ஒன்று கூகுள்.
நமது அன்றாட வாழ்க்கையில் எது ஒன்றை தேடினாலும் அதற்கான உரிய பதிலை கூகுள் தந்துவிடும் என்பது அறியத்தக்கது.
கூகுள் நிறுவனம் ஒரு நாளில் ஒவ்வொரு வினாடியும் 99,000 கேள்விகளோடு கூகுள் தேடுதளில் ஈடுபடுகின்றதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட கூகுள் ரெசிபிகளில் டாப் 10 ரெசிபிகளின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
1.மாங்காய் ஊறுகாய்
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் ஊறுகாய் பிரியர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
அப்படிப்பட்ட ஊறுகாயை ரசிக்க, ருசிக்க, கெட்டுபோகாமல் பார்த்துக்கொள்ள மக்கள் கூகுளின் உதவியை நாடுகின்றனர். இந்த ரெசிபியின் தேடல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2.செக்ஸ் ஆன் தி பீச்
கடற்கரையில் நேரத்தை செலவிடும்போது அங்குள்ள பானங்களை அருந்துவது என்பது தனி ருசி எனலாம்.
இது ஓட்கா, ஆரஞ்சு ஜுஸ், பீச் ஸ்னாப்ஸ் மற்றும் நெல்லிச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கபடுகிறது. கூகுளின் தேடல் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
3.பஞ்சாமிர்தம்
இந்தியாவில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதமான பஞ்சாமிர்தம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இது பால், தயிர்,நெய், தேன் மற்றும் சர்க்கரை, பழங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும்.
4.ஹகுசாய்
ஜப்பானிய செய்முறையில் முட்டைக்கோஸ், கேரட், கோஷர் உப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படுவது தான் ஹகுசாய்.
இவ்வித்தியாசமான ரெசிபி கூகுள் தேடலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
5.தனியா பஞ்சிரி
வறுத்த மல்லித் தூள் , துருவிய தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படுவதுதான் தனியா பஞ்சிரி.
இது கூகுள் தேடலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
6.கரஞ்சி
தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் செய்யப்படும் இனிப்பு தான் கரஞ்சி.
இந்த ரெசிபி கூகுள் தேடலில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.
7.திருவாதிரை களி
தமிழர்களின் உணவு முறையில் முக்கியமானது திருவாதிரை களி. இது 7வது இடத்தை பிடித்துள்ளது.
அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய், பருப்புகள் மற்றும தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு ரெசிபி தான் திருவாதிரை களி.
8.உகாதி பச்சடி
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பண்டிகைக் காலங்களில் செய்யப்படும் ரெசிபி தான் உகாதி பச்சடி.
இந்த உகாதி பச்சடி ரெசிபி 8வது இடத்தை பிடித்துள்ளது.
9.கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாள்களில் மக்கள் விரும்பி செய்யும் ரெசிபி தான் கொழுக்கட்டை.
அரிசி மாவு, வெல்லம், பொரிகடலை சேர்த்து தயார் செய்யப்படும் இந்த ரெசிபி 9-வது இடத்தை பிடித்துள்ளது.
10.ரவா லட்டு
பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளில் செய்யப்படும் ரெசிபி தான் ரவா லட்டு. இந்த ரவா லட்டு 10-வது இடத்தை பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |