இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் TOP 10 தலைமை செயல் அதிகாரிகள் பட்டியல்!
2023 -ம் நிதியாண்டில் சுமார் 1320 தலைமை செயல் அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நிலையில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை பார்க்கலாம்.
அதிக சம்பளம் வாங்கும் TOP 10 CEO
10. சஞ்சீவ் மேத்தா
ஹிந்துஸ்தான் யுனிலிவர் (Hindustan Unilever) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் மேத்தா (Sanjiv Mehta).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.22.36 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். இந்த ஊதியமானது முந்தைய ஆண்டை விட சற்று அதிகம்.
9. சி. விஜயகுமார்
ஹெச்.சி.எல் டெக் (HCLTech) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலான இயக்குனருமாக இருப்பவர் சி. விஜயகுமார் (C Vijayakumar).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.28.4 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். இவர் கடந்த 2016 -ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
8.ராஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் (Tata Consultancy Services) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ராஜேஷ் கோபிநாதன்(Rajesh Gopinathan).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.29.61 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். 2023 -ம் ஆண்டில் ராஜினாமா செய்து தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.
7. சிபி குருனானி
டெக் மகேந்திரா (Tech Mahindra) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சிபி குருனானி (C.P.Gurnani).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.32 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். 20 ஆண்டுகாலம் பணிபுரிந்த இவர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
6. சுதிர் சிங்
கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பாட்டு இயக்குனராகவும் இருப்பவர் சுதிர் சிங் (Sudhir Singh).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.34 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். இவர் கடந்த 2020 -ம் ஆண்டிலிருந்து தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
5. சலீல் பரேக்
இன்போசிஸ் (Infosys) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சலீல் பரேக் (Salil Parekh). இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.56 கோடி ஊதியம் வாங்கியுள்ளார்.
4. நிதின் ராகேஷ்
எம்பாசிஸ் (Mphasis) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குனராகவும் செயல்பட்டு வருபவர் நிதின் ராகேஷ் (Nitin Rakesh).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.59.2 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். இவர் கடந்த 2017 -ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
3.சந்தீப் கல்ரா
பெர்சிஸ்டென்ட் சிஸ்டம் (Persistent Systems) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் கல்ரா (Sandeep Kalra).
இவர் 2023 -ம் நிதியாண்டில் ரூ.61.7 கோடி ஊதியம் வாங்கியுள்ளார். இந்த ஊதியம் முந்தைய நிதி ஆண்டை விட 31% அதிகமாகும்.
2. தியரி டெலபோர்ட்
விப்ரோ (wipro) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தியரி டெலபோர்ட் (Thierry Delaporte).
இவர் 2023 ஆம் நிதியாண்டில் ரூ.82 கோடி ஊதியம் பெற்றார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகியுள்ளார்.
1.ரவிக்குமார் சிங்கி செட்டி
காக்னிசென்ட் (Cognizant) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2023 -ம் ஆண்டு பதவியேற்றவர் ரவிக்குமார் சிங்கி செட்டி (Ravi Kumar S).
இவர் 2023 ஆம் நிதியாண்டில் ரூ.186 கோடி ஊதியமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |