இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் முதல் 10 வேலைகள்: என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் முதல் 10 அதிக சம்பளம் தரும் வேலைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.
1. டேட்டா விஞ்ஞானி (Data scientist)
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. சராசரியாக இவர்கள் ஆண்டுக்கு ரூ.10-15 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள்.
2. செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள் (AI Engineers)
அனைத்து தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருந்து வருவதால், வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக ரூ.10-12 லட்சம் வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
3. பிளாக்செயின் டெவலப்பர் (Blockchain developer)
பிளாக்செயின் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக ரூ.8-12 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
4. மேலாண்மை ஆலோசகர்கள் (Management Consultants)
வணிகங்களின் செயல்திறன் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவத்தை மேலாண்மை ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். இதற்கு சராசரியாக ரூ.10 முதல் 20 லட்சம் பெறுவார்கள்.
5. முதலீட்டு வங்கியாளர்கள் (Investment bankers)
சிக்கலான நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் பொறுப்பு, முதலீட்டு வங்கியாளர்கள் கையில் உள்ளது. இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் என உள்ளது.
6. ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ் (IT Architects)
ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ் சிக்கலான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு உயர் நிலை கட்டமைப்புகளை வடிவமைக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.8 முதல் 12 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
7. மருத்துவ நிபுணர்கள் (Medical professionals)
சுகாதாரத் துறையில், மருத்துவ நிபுணர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். சில நிபுணர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
8. தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் (Data Security Analysts)
தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக ரூ.7-10 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
9. பெட்ரோலிய பொறியாளர்கள் (Petroleum Engineers)
இந்தியாவின் பெட்ரோலிய பொறியாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக ரூ. 8-15 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள்.
10. பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant)
நிதி தொடர்பான காரியங்களில் நிபுணத்துவம் பெற்ற பட்டயக் கணக்காளர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 6-10 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |