கனேடிய காப்பகத்திலிருந்து மாயமான பச்சிளங்குழந்தை: கிடைத்துள்ள துயரச் செய்தி
குழந்தைகள் பகல் நேரக் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போன ஒரு குழந்தை, கிணறு ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் கனேடிய நகரம் ஒன்றில் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
காணாமல் போன குழந்தை
நேற்று முன் தினம், வியாழக்கிழமை, மாலை 5.17 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள பகல் நேரக் கப்பகம் ஒன்றிலிருந்து பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
தகவலறிந்து வந்த பொலிசாருடன், அப்பகுதி மக்களும் இணைந்து குழந்தையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி
ஒரு மணி நேரத்துக்குப் பின், கிணறு ஒன்றிற்குள் அந்தக் குழந்தை விழுந்து கிடப்பது தெரியவரவே, உடனடியாக மீட்புக் குழுவினர் அந்தக் குழந்தையை மீட்டு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கத்துவங்கியுள்ளனர்.
ஆனால், அவர்களால் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை உயிரிழந்துவிட்டதை பொலிசார் உறுதி செய்த நிலையில், அந்தக் குழந்தையின் தாய் கண்ணீர் விட்டுக் கதற, அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அதைக் கண்டு கலங்கிப்போயிருக்கிறார்கள்.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள்.