பேய் படங்களை மிஞ்சும் சம்பவம்.. சீலிங்கில் தொங்கிய சிறுமியின் தலை! பகிர் கிளப்பும் வீடியோ
சீனாவில் உள்ள குடியிருப்பின் சீலிங் ஒன்றில் சிறுமியின் தலை மாட்டி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
சீனாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் 13 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு மூலையில் ஒரு சிறிய ஓட்டை தென்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஓட்டை வழியாக தலையை கீழே நுழைத்து எட்டி பார்த்துள்ளார். பிறகு தலையை வெளியே எடுக்க முயன்ற போது ஓட்டைக்குள் சிக்கி எடுக்கமுடியாமல் போனது.
வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்த போது பேய் படத்தில் வருவதை போன்ற காட்சியை கண்டு பயந்து போன அவர்கள் மேலே சென்று, தங்கள் மகள் ஓட்டையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் உடனே மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பல முயற்சிகள் செய்தும் சிறுமியின் தலையை வெளியே எடுக்கமுடியவில்லை.
கடைசியில் சிறுமியின் முடி முழுவதும் எண்ணெய் ஊற்றி இழுத்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு போராடி சிறுமியை மீட்டனர். சீலிங்கில் சிக்கி கொண்ட சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.