குட்டி இளவரசி சார்லட் தான் சந்திக்காத தன் பாட்டி டயானாவுக்கு எழுதியுள்ள மனதைத் தொடும் செய்தி...
அன்னையர் தினத்தில் தன் பாட்டி டயானாவுக்காக குட்டி இளவரசி சார்லட் உருவாக்கிய வாழ்த்து அட்டையில் எழுதியுள்ள செய்தி நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.
பாட்டியை நேரில் சந்தித்திராத குட்டி இளவரசி
நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குட்டி இளவரசி சார்லட், தன் தாய், தன் தாயின் தாயும் தனது பாட்டியுமான Carole Middleton ஆகியோருடன், தான் நேரில் சந்தித்திராத தனது பாட்டியான டயானாவுக்காகவும் வாழ்த்து அட்டைகளை தயார் செய்திருந்தாள்.

Image: Getty Images
தன் தந்தையாகிய இளவரசர் வில்லியம் தங்கள் பாட்டி டயானாவைக் குறித்து பிள்ளைகளிடம் எவ்வளவு பேசியிருக்கிறார் என்பது சார்லட்டின் வாழ்த்து அட்டையிலிருந்து தெரியவந்துள்ளது.

Image: 2022 Max Mumby/Indigo
சார்லட்டின் வாழ்த்து
குட்டி இளவரசி சார்லட், பல வண்ணங்களால் ஆன ஒரு இதயத்தை வரைந்து, அதில், அன்புள்ள பாட்டி டயானா அவர்களுக்கு, அன்னையர் தினத்தில் நான் உங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அப்பா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறார்.
அன்புடன் சார்லட்... என்று எழுதியிருக்கிறாள் சார்லட். குட்டி இளவரசர் ஜார்ஜ், அன்புள்ள பாட்டி டயானா அவர்களுக்கு, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அன்புடன் ஜார்ஜ் என்று குறிப்பிட, கடைக்குட்டி இளவரசர் லூயிசோ தன் வாழ்த்துக்களை படங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

Image: @KensingtonRoyal /Twitter

Image: @KensingtonRoyal /Twitter

Image: @KensingtonRoyal /Twitter

Image: POOL/AFP via Getty Images