ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில் குட்டி எலி! பதறிய வாடிக்கையாளர்
மும்பை உணவகத்தில் ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில் குட்டி எலி இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிக்கன் கிரேவி
மும்பையில், வங்கி நிர்வாகியான வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி இரவு ஷாப்பிங்கை முடித்து விட்டு உணவகத்தில் சாப்பிட நினைத்துள்ளார்.
பின்பு அவர், மும்பையின் பாந்த்ராவில் உள்ள உணவகத்திற்கு சென்று சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்துள்ளார்.
பின்னர், சிக்கன் கிரேவி வந்ததும் வாடிக்கையாளர் சாப்பிட ஆரம்பித்தார். முதலில் அதில் இருந்த சிக்கன் துண்டுகளை சாப்பிட்டார்.
மேலும், தொடர்ந்து சாப்பிடும் போது குட்டி வாலுடன் ஒரு பீஸ் இருப்பதை அவர் கண்டார். அப்போது அதை வெளியில் எடுத்த போது அது குட்டி எலி என்று வாடிக்கையாளர் கண்டுபிடித்தார்.
பொலிசில் புகார்
இதனால், பதறிப்போன வாடிக்கையாளர் உணவக ஊழியரிடம் சென்று கூறினார். அப்போது, ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இதனால், உடல்நிலை சரியில்லாமல் போன வாடிக்கையாளர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டார். பின்பு அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், உணவகத்தின் மேலாளர் மற்றும் இரு சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
@MumbaiPolice Rat found in our gravy at #papaPanchodadhaba near Pali naka Bandra West . No manager or owner is ready to listen . We called police and 100 as well . No Help yet . @mumbaimirror @TOIMumbai pic.twitter.com/YRJ4NW0Wyk
— Stay_Raw (@AMINKHANNIAZI) August 13, 2023
தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த உணவகம் பஞ்சாபி உணவுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |