6 விக்கெட்கள் சாய்த்து பயம்காட்டிய பவுலர்! அசராமல் சதம் விளாசிய லித்தன் தாஸ்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்காளதேச வீரர் லித்தன் தாஸ் சதம் விளாசினார்.
குர்ரம் ஷஷாத் மிரட்டல் பந்துவீச்சு
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 274 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது.
5️⃣ wickets for Khurram Shahzad! ?
— Pakistan Cricket (@TheRealPCB) September 1, 2024
Mehidy Hasan Miraz is finally dismissed for an impressive 78 ?#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/BZjXKKSz1c
குர்ரம் ஷஷாத்தின் மிரட்டலான பந்துவீச்சில் வங்காளதேசம் 26 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
லித்தன் தாஸ் சதம்
அதன் பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் லித்தன் தாஸ் கைகோர்த்தனர். இருவரின் பொறுப்பான ஆட்டத்தினால் வங்காளதேசம் 200 ஓட்டங்களை கடந்தது.
மெஹிதி ஹசன் மிராஸ் (Mehidy Hasan Miraz) 124 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தஸ்கின் அகமது (1) உடனே வெளியேற, நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய லித்தன் தாஸ் (Litton Das) 4வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
Scintillating 100! ?
— Bangladesh Cricket (@BCBtigers) September 1, 2024
Litton Das slams his 4th Test hundred at Rawalpindi against Pakistan. ??
PC: PCB#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/hEoimzT89N
Before getting out, Mehidy Hasan Miraz scored a crucial 78 off 124 balls, hitting 12 fours and a six!?
— Bangladesh Cricket (@BCBtigers) September 1, 2024
PC: PCB#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/t8Eb72jPIh
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |