58 பந்தில் 85 ரன் விளாசிய கேப்டன்..ரசல் கடைசி பந்துவரை போராடியும் தோல்வி
வங்கதேச பிரீமியர் லீக்கில் சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கமில்லா விக்டோரியன்ஸ் அணியை வீழ்த்தியது.
Howell 62
சாட்டோகிராமில் நடந்த போட்டியில் சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சில்ஹெட் அணி 177 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய Howell 31 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். அவர் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
Brilliant batting display by Howell ?#BPL2024 #MyGP pic.twitter.com/6nlTO51cFJ
— bdcrictime.com (@BDCricTime) February 19, 2024
பின்னர் களமிறங்கிய கமில்லா விக்டோரியன்ஸ் அணியில் இம்ருல் கேயாஸ் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டௌஹித் ஹிரிடோய் 17 ஓட்டங்களிலும், ஜான்சன் சார்லஸ் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
லிட்டன் தாஸ் ருத்ர தாண்டவம்
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 58 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் விளாசினார்.
Career best T20 innings for Litton Das ?#BPL2024 #DanoPower pic.twitter.com/JrguQAdh0f
— bdcrictime.com (@BDCricTime) February 19, 2024
அதன் பின்னர் ஆண்ட்ரே ரசல் வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழக்க, கமில்லா அணி 165 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
ரசல் 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் விளாசினார். சில்ஹெட் அணி தரப்பில் டன்ஸிம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Sylhet beat star-studded Comilla by 12 runs
— bdcrictime.com (@BDCricTime) February 19, 2024
Scorecard- https://t.co/fjWWtGAhp6#BPL2024 #WaltonMobile pic.twitter.com/JjZeqMwq2S
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |