சதமடித்த தாஸ்: ஆப்கானிஸ்தானுக்கு 479 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
Bangladesh 372-7 dec vs afghanistan: வங்காளதேச அணி நிர்ணயித்த 479 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது.
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 479 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி விளையாடி வருகிறது.
வங்காளதேசம் 372 ஓட்டங்கள் குவிப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அபு தாபியில் நடந்து வருகிறது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 346 ஓட்டங்களும், ஆப்கானிஸ்தான் அணி 240 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 372 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
லித்தன் தாஸ் சதம்
லித்தன் தாஸ் (Litton Das) 102 (117) ஓட்டங்களும், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 82 ஓட்டங்களும், முஷ்பிகுர் ரஹீம் 81 ஓட்டங்களும் எடுத்தனர். யாமின், சலீம் சஃபி மற்றும் ஜியா-உர்-ரெஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

நான்காவது நாளான இன்று, ஆப்கானிஸ்தான் அணி 479 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.
அணித்தலைவர் ரஹ்மத் ஷா (Rahmat Shah) நிதானமாக ஆடி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.