சாதனை சதத்தை மகளின் பிறந்தநாளுக்கு பரிசளித்த லிட்டன் தாஸ்
litton das dedicated his century to daughter birthday: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ், அதனை தனது மகளின் பிறந்தநாளுக்கு பரிசாக அளித்துள்ளார்.
மகளின் பிறந்தநாளுக்கு சதத்தை பரிசளித்த லிட்டன் தாஸ்
தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் குவித்தது.

இதுவே வங்கதேச அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக Towhid Hridoy மற்றும் Litton Das சதம் விளாசினார்.
விக்கெட் கீப்பராக தனது 7வது சதத்தை பதிவு செய்த லிட்டன் தாஸ், வங்கதேச அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

சதம் விளாசிய உடன் லிட்டன் தாஸ் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்தார். அதில் தன் மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
মনে রাখার মতো এক শতরান, উল্লাসের উদযাপন একেবারে মন থেকে ❤️ #SAvBAN https://t.co/jjHdaa3jAv
— FanCode (@FanCode) November 16, 2026
அந்தக் குறிப்பில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் இளவரசி. இந்த 100 ரன்கள் உனக்காக' என்று எழுதப்பட்டிருந்தது.