21 பந்துகளில் அரைசதம்! இந்திய அணியை அலறவிட்ட வீரர்
இந்தப் போட்டியில் லித்தன் தாஸ் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்
தாஸ் 64 போட்டிகளில் 8 அரைசதங்களுடன் 1378 ஓட்டங்கள் குவித்துள்ளார்
அடிலெய்டில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் லித்தன் தாஸ் அதிவேக அரைசதம் விளாசினார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 184 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸர், பவுண்டரி என அடித்து நொறுக்கிய தாஸ், 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
Litton Das brings up his fifty off just 21 balls! ?#T20WorldCup | #INDvBAN | ?: https://t.co/vDRjKeeGvf pic.twitter.com/sPM4wU5vch
— ICC (@ICC) November 2, 2022
இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய இரண்டாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அஷ்ரபுல் 20 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
மேலும் இந்திய அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் லித்தன் தாஸ் பெற்றார்.
Getty Images